பாவூர்சத்திரம் அருகே கார் மீது லாரி மோதி இருவர் படுகாயம்

பாவூர்சத்திரம், மே 17: நெல்லை பாரதியார் தெருவைச் சேர்ந்த நெல்லைநாயகம் மகன் ராமசுந்தரம் (43), இவரது நண்பர் கருங்காடு மேலத்தெரு இசக்கி மகன் சுப்பையா (32). இவர்கள் இருவரும் கேரளாவில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு நேற்று முன்தினம் இரவு காரில் நெல்லை திரும்பி கொண்டிருந்தனர்.

Advertising
Advertising

தென்காசி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் பாவூர்சத்திரத்தை அடுத்துள்ள சிவகாமிபுரம் விலக்கு அருகே வரும் போது தூத்துக்குடியில் இருந்து கொல்லம் நோக்கி அண்டித்தோடு ஏற்றி சென்ற லாரி, கார் மீது மோதியது. இதில் ராமசுந்தரம், சுப்பையா ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.லாரியை ஓட்டி வந்த கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குன்னத்தூர் வீடு பாஸ்கரன் மகன் அனில்குமார் (49) என்பவரிடம் பாவூசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: