உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா இன்று துவக்கம்

திசையன்விளை, மே 17: உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா இன்று துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது. இன்று காலை அபிஷேகம் மற்றும் பூஜைகளும், மாலை 5 மணிக்கு சொற்பொழிவும், 6 முதல் 9 மணி வரை தேவார இன்னிசையும், இரவு 9 மணிக்கு வில்லிசையும் நடக்கிறது. நாளை (18ம்தேதி) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடைதிறப்பு, 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், உதயமார்த்தாண்ட சிறப்பு பூஜை, 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு உச்சிகால சிறப்பு பூஜையும் நடக்கிறது.

மாலை 5 மணிக்கு பூதப்பாண்டி குமார் நாதஸ்வரம், 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு சாயரட்சை சிறப்பு பூஜையும்,

தொடர்ந்து சமய சொற்பொழிவு நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு ராக்கால பூஜையும், 10 மணிக்கு பக்தி மெல்லிசையும், இரவு 2 மணிக்கு சுவாமி பூங்கோவில் சப்பரத்தில் எழுந்தருளி, மேளதாளம் வாணவேடிக்கை முழங்க வீதிஉலா வந்து மகர மீனுக்கு காட்சி கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. பல்வேறு ஊர்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார்.

Related Stories: