×

மலைக்குடிப்பட்டி மாதவராகி அம்மன் கோயில் திருவிழா

இலுப்பூர், மே 17:  இலுப்பூர்  அருகே மலைக்குடிப்பட்டியில்  உள்ள மாதவராகி அம்மன் கோயில் திருவிழா நேற்று  நடைபெற்றது. இலுப்பூர் அருகே உள்ள மலைக்குடிப்பட்டியில் மிகவும்  பிரசித்தி பெற்ற மாதவராகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும்  திருவிழா கடந்த 7ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழா  துவங்கிய நாள் முதல் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. நேற்று  முன் தினம் இரவு சிறப்பு சந்தன காப்பு அலங்காரத்தில் மலைக்குடிப்ட்டியில்  உள்ள சித்தி விநாயகர் கோயில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று கோயிலுக்கு சென்று அங்கு பக்தர்களுக்கு  அருள்  பாலித்தார். விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்து  வழிபாடு நடத்தினர். விழாவையொட்டி படுகளம் என்ற விளையாட்டு நிகழச்சி  நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags : Amman Temple Festival ,
× RELATED திருவாடானை அம்மன் கோயில் விழாவில் அரவான் படுகளம் நிகழ்வு