தேர்தலை காரணம் காட்டி கைவிரித்த அதிகாரிகள் சான்றிதழ்கள் கிடைக்காமல் பறிபோகும் 25சதவீத இட ஒதுக்கீடு

கிராமங்களில் பரிதவிக்கும் பெற்றோர்

விண்ணப்ப தேதியை நீட்டிக்க கோரிக்கை

சேலம், மே 17: நாடாளுமன்றத் தேர்தலை காரணம் காட்டி அதிகாரிகள், உரிய சான்றிதழ்களை வழங்காததால், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் கிராமத்து குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது தடைபட்டுள்ளது என்று ெபற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், கடந்த 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி, சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் 25 சதவீதம் சேர்க்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி நடப்பாண்டுக்கான (2019-20) மாணவர் சேர்க்கை, கடந்த ஏப்ரல் மாதம் 24ம்தேதி தொடங்கியது. நாளை (18ம்தேதி) விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கிராமப்புறங்களில் தேர்தலை காரணம் காட்டி, அதிகாரிகள் சான்றிதழ்கள் தர மறுத்ததால், தங்கள் குழந்ைதகளுக்கான வாய்ப்புகள் தடைபட்டுள்ளது என்று பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ெபற்றோர் கூறியதாவது:

25 சதவீத இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க, இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கான சாதி சான்றிதழ், பிறப்புச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்றவற்றையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆனால், நடப்பாண்டு கிராமப்புறங்களை ெபாறுத்தவரை இது போன்ற சான்றிதழ்கள் ேகட்டு விண்ணப்பித்த பெரும்பாலானவர்களுக்கு, இதுவரை கிடைக்கவில்லை. ஏப்ரல் 18ம்தேதிக்கு முன்பு வரை, விண்ணப்பித்தவர்கள் இது குறித்து சம்மந்தப்பட்ட விஏஓ, ஆர்.ஐ, தாசில்தார், ஆர்டிஓ ஆகியோரை தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது தேர்தல் வேலைகள் இருப்பதால் சான்றிதழ்கள் கிடைப்பது தாமதமாகும் என்றனர்.

தேர்தல் முடிந்த பிறகு கேட்டால் சர்வர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறுகின்றனர். இதில் மலைவாழ் மற்றும் பழங்குடியின குழந்தைகளுக்கு ஏற்கனவே பல்வேறு காரணங்களை கூறி, சாதிசான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்து வருகின்றனர். இந்த முறை தேர்தலை காரணம் காட்டியே, சான்றிதழ் வழங்குவதை அதிகாரிகள் தவிர்த்து விட்டனர்.

இதனால் எங்கள் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு தடைபட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு நாளையுடன் (18ம்தேதி) நிறைவு பெறும் விண்ணப்ப தேதியை, மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும். முக்கியமாக கிராமப்புறங்களில் கலெக்டர் நேரடி ஆய்வு செய்து, சான்றிதழ்களை உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பெற்றோர் கூறினர்.

Related Stories: