நிலத்தகராறில் தொழிலாளியை தாக்கிய 4பேர் மீது வழக்கு பதிவு

தாரமங்கலம், மே 17:  தாரமங்கலம்  அருகிலுள்ள செலவடைநந்தன்வளவு பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேல்(45). அதே பகுதியை  சேர்ந்த கோவிந்தசாமி(40). இருவரும் நெசவுத்தொழில் செய்து வருகின்றனர். இருவருக்கும்  இடையே நிலத்தகராறு மற்றும் கைத்தறி  சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

Advertising
Advertising

இந்நிலையில், நேற்று முன்தினம் கோவிந்தசாமி  வீட்டிற்கு சென்ற குழந்தைவேல், அவரது மனைவி அலமேலு மற்றும் லோகநாதன்(24),  வேலுமணி(21) ஆகியோர் தடி மற்றும் இரும்பு கம்பிகளை கொண்டு கோவிந்தசாமியை  சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவரை,  அக்கம்பக்கத்தினர்  மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தாரமங்கலம்  போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உளள குழந்தைவேல் உள்ளிட்ட 4 பேரையும்  தேடி வருகின்றனர்.

Related Stories: