×

வாழப்பாடி அருகே சூறைக்காற்றுக்கு மரம் முறிந்து விழுந்து கோயில், வீடுகள் சேதம்

வாழப்பாடி, மே 17: வாழப்பாடி அருகே சூறைக்காற்றுக்கு மரம் முறிந்து விழுந்ததில் கோயில், வீடுகள் சேதமடைந்தது. வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது திருமனூர் ஊராட்சி ஊர்நாடு பஜனை மடம்  ஓம்சக்தி கோயில் அருகே இருந்த நூறு ஆண்டுகள் பழமையான ஆலமரத்தின் பெரிய கிளை, சூறைக்காற்றுக்கு முறிந்து கோயில் மற்றும் அருகில் உள்ள வீடுகள் மீது விழுந்தது.

இதில் கோயில் சுவர், இரண்டு வீடுகள் மற்றும் முத்துக்குமார் என்பவரது டூவீலர் ஆகியவை சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எஞ்சியுள்ள ஆலமரம் எந்த நேரத்திலும் விழக்கூடிய நிலையில் உள்ளதால், அதிகாரிகள் பாதுகாப்பாக மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags : lake ,houses ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு