×

சாதனையாளர்களை உருவாக்கிய டி.கே.சாமி மெட்ரிக்குலேசன் பள்ளி

கிருஷ்ணகிரி மார்க்கெட் செல்லும் சாலையில், புதுப்பேட்டை கார்னேசன் வளாகத்தில் 47 வருடங்களுக்கு முன்பு மாவட்டத்தில் முதன்முதலாக, நிறுவனர் நாதனின் முயற்சியால் இப்பள்ளி உருவாக்கப்பட்டது. அவருக்கு பிறகு நிர்வாக இயக்குநர் பிரான்சிஸ்சேவியர், தாளாளர் பிரபாசேவியர் ஆகியோரின் சீரிய மேற்பார்வையில் இப்பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சாதனையாளர்களை உருவாக்கி வரும் பள்ளியாக இப்பள்ளி திகழ்ந்து வருகிறது. இதுகுறித்து நிர்வாக இயக்குநர்கள் கூறியது: ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினை சேர்ந்த குழந்தைகள், சிறப்பான முறையில் குறைந்த கல்வி கட்டணத்தில் சீரிய கல்வியை பெற வேண்டும் என்பது எங்கள் பள்ளியின் முக்கிய நோக்கம். மாநகரின் மையப்பகுதியில் இயற்கை காற்றோட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

47 வருடங்களாக சிறப்பான முறையில் சிறந்த பயிற்சியின் முலம் ஒழுக்கம், சிறப்பான கல்வியை வழங்கி வருகிறோம். கடந்த 20 வருடங்களாக, தொடர்ந்து பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்று கொடுக்கும் பள்ளியாக திகழ்கிறது. கல்வியில் அனுபவம், திறமையை கொண்ட ஆசிரிய, ஆசிரியைகளால் சிறப்பான பயிற்சி வழங்கப்படுகிறது. அனைத்து பாட பிரிவுகளுக்கும் தனித்தனி ஆய்வக வசதி உள்ளது. கல்வியில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு தனி கவனம் செலுத்தி, அவர்களை அதிக மதிப்பெண்கள் பெற வைப்பதே இப்பள்ளியின் நோக்கம். மேலும் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு எளிமையான ஆங்கில பயிற்சியை,

புலமை பெற்ற ஆசிரியர்கள் மூலம் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. மேலும், படிப்பு மட்டும் இல்லாமல் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கபடி, கோ-கோ, சிலம்பம், மற்றும் மனம் இறுக்கம் இல்லாமல் இருக்க யோகா கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஆண்டு விழா, விளையாட்டு விழா, பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்  போன்றவை நடத்தப்பட்டு வருகிறது. இதனால், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒரு புரிந்துணர்வு ஏற்படுகிறது. உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த சாதனையாளர்களாக உருவாக எங்கள் டி.கே.சாமி மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு வருகை தாருங்கள். எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை, தற்போது சேர்க்கை நடந்து வருகிறது. இவ்வாறு நிர்வாக இயக்குநர்கள் கூறினர்.

Tags : DK Samy Matriculation School ,recipients ,
× RELATED இருப்பிட சான்று பெற்றவர்களுக்கே...