×

பிளஸ்1 துணைத்தேர்வுக்கு தட்கல் முறையில் பதிவு செய்ய இன்று கடைசி நாள்

கிருஷ்ணகிரி, மே 17:  கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மார்ச் 2019ல் நடந்த மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வில், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் வருகை புரியாதவர்கள், வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சிறப்பு துணைத் தேர்வெழுத நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க இயலாமல், தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பிக்கலாம்.   தேர்வெழுத விரும்பும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தனித்தேர்வர்கள், சிஇஓ அலுவலகத்தில் தங்களது விண்ணப்பத்தை இன்றைக்குள்(17ம்தேதி) பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய வரும் போது, தமது மதிப்பெண் பட்டியலின் நகலினையும், தேர்விற்கு வருகை புரியாதவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினையும் எடுத்து வந்து, பதிவு செய்யும் அலுவலரிடம்   காண்பிக்க வேண்டும்.

தேர்வு கட்டணமாக ஒரு பாடத்திற்கு ₹50, இதரக் கட்டணம் ₹35, கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ₹1000 மற்றும் பதிவு கட்டணமாக ₹50 சேர்த்து சிஇஓ அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.  இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவுரைகளின்படி வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் பாடங்கள் வகைப்பாடு அறிந்து, அதன்படி விண்ணப்பிக்க வேண்டும். தனித்தேர்வர்களுக்கு தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது. தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Patna1 Plus ,
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்