×

கொல்லிமலையில் மண் மாதிரி சேகரிக்கும் முகாம்

சேந்தமங்கலம், மே 17:  கொல்லிமலையில், புதிய முறையில் மண் மாதிரி சேகரிக்கும் முகாம் நடந்தது. கொல்லிமலை வட்டாரம் தேவனூர் நாடு, வாழவந்தி நாடு ஆகிய கிராமத்தில் மண் கண்டம் அறிதல் என்ற புதிய முறைப்படி, மண் மாதிரி சேகரிக்கும் முகாம் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் அன்புசெல்வி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

 அவர் பேசுகையில், ‘மண்ணின் தரத்தை பரிசோதனை செய்து, அதற்கேற்ப தேவையான உரத்தை பயன்படுத்த வேண்டும்.  மண் கண்டம் முறையில் மண் மாதிரி எடுத்தல், மண்ணில் உள்ள சத்துக்களை அறிந்து அதற்கேற்ப உரமிட்டு செலவுகளை குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை மண் ஆய்வின் முக்கியத்துவம் ஆகும்,’ என்றார். முகாமில் வேளாண் துணை இயக்குனர் சௌந்தரராஜன், மண் ஆய்வு கூட அலுவலர் ஜெயமாலா, துணை வட்டார அலுவலர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : camp ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு