×

வாக்கு எண்ணும் மையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு திருச்செங்கோடு

நாமக்கல், மே 17:  நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில், கடந்த மாதம் 18ம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான மின்னணு வாக்குபதிவு எந்திரம், விவிபேட் போன்றவை சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி அறையில் வாக்கு எண்ணும் மையமான திருச்செங்கோடு விவேகானந்தா பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தினமும் சுழற்சி முறையில் உயர் போலீஸ் அதிகாரிகள் 24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையத்தை கண்காணித்து வருகிறார்கள்.

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையம் உச்சகட்ட பாதுகாப்பில் இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வளாகத்துக்குள் செல்ல போலீஸ் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகளை தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று, அரசியல் கட்சிகளின் முகவர்கள் செல்ல தனி தடுப்புகளுடன் கூடிய பாதை அமைக்கும் பணி, தற்போது நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையும், தனித்தனி அறைகளில் நடைபெறுகிறது. அந்த அறைகளின் ஒரு பகுதியில், விவிபேட் எந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்கு தனி அறை ஏற்படுத்தப்படுகிறது. நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வாக்குகள் 6 அறைகளில் எண்ணப்படுகிறது. அங்கு சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகிறது.

Tags : Tiruchengode ,vote counting center ,
× RELATED சென்னை ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் காவல் ஆணையர் ஆய்வு!!