×

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் தண்ணீரின்றி காய்ந்த தென்னை மரங்கள் விவசாயிகள் வேதனை

பாப்பிரெட்டிப்பட்டி, மே17:  பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் தென்னை மரங்கள் காய்ந்து கருகிய நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் ேவதனை அடைந்துள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சுற்றியுள்ள முள்ளிக்காடு, தமானிகோம்பை, வெங்கடசமுத்திரம், மோளையானூர், தேவராஜபாளையம் பட்டுக்கோணாம்பட்டி, அதிகாரப்பட்டி, பள்ளிப்பட்டி, மெணசி உள்ளிட்ட பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் தென்னை மரங்களை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த 3ஆண்டுகளாக பருமழை பொய்த்து ேபானதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து அணைகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் ஓடைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது.

இதனால் தென்னை மரங்கள் அனைத்தும் காய்ந்து கருகிய நிலையில் உள்ளது. சில விவசாயிகள் காய்ந்த தென்னை மரங்களை வெட்டி, குறைந்த விலைக்கு விற்பனைக்கு அனுப்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘3 ஆண்டுகளாக கிணற்றில் சுத்தமாக தண்ணீர் இல்லை. மழை பொழிவும் இல்லாததால், தென்னைக்கு கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், தென்னை மரங்கள் முற்றிலுமாக காய்ந்து விட்டன. இதனால் கடந்த 25 ஆண்டுகளாக வளர்த்த தென்னை மரங்கள், பலன் தரும் தருவாயில் காய்ந்து விட்டது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்க ேவண்டும்,’ என்றனர்.

Tags : area ,Papirpetipatti ,
× RELATED வாட்டி வதைக்கும்...