×

வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் 16ம் நூற்றாண்டு வீரக்கல் ஒப்படைப்பு

வேலூர், மே 17: வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் 16ம் நூற்றாண்டு வீரக்கல் ஒப்படைக்கப்பட்டது.  திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகாவுக்குட்பட்ட சென்னியமங்கலம் கிராமத்தில் கடந்த 2016ம் ஆண்டு கி.பி.16ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர பேரரசு காலத்திய வீரக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. போரில் இறந்தவர்கள் நினைவாக வைக்கப்படும் இந்த கல், போளூர் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதையறிந்த திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி இந்த வீரக்கல்லை வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்்தில் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். அதன்ேபரில் நேற்று காலை 16ம் நூற்றாண்டை சேர்ந்த அந்த வீரக்கல் கொண்டு வரப்பட்டு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்ட காப்பாட்சியர் சரவணன் கூறுகையில், வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 19 வீரக்கல் கண்டறியப்பட்டு அருங்காட்சியகத்துக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது' என்றார்.

Tags : Vellore Government Museum ,
× RELATED வேலூர் அருகே காரில் கடத்தல்: பாஜக...