×

அரசு மதுபானங்களை விற்ற 4 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளின்  அருகே அனுமதியின்றி பார்கள் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சந்தோஷ் ஹதிமானிக்கு அதிக அளவில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சிபுரம் மதுவிலக்கு போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். இந்த உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல் பிரிவு  போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் போலீசார் காஞ்சிபுரம் பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் செயல்படும் மதுபானக் கூடங்களை கண்டறிந்து  திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அனுமதியின்றி அரசு மதுபானங்களை ரெட்டிபேட்டையில் விற்பனை செய்த   பார் ஊழியர் கிருபானந்தன் (43), சாலியர் தெரு பகுதியில் விற்பனையில் ஈடுபட்ட நாகராஜ் ( 26 ), மேட்டு தெரு  பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட பார் ஊழியர் முருகன் ( 40 ), நெல்லுக்கார தெருவில்  பசுபதி ( 25 )  ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 150 மதுபாட்டில்களையும் மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு