×

சுங்குவார்சத்திரம், வல்லம் சிப்காட் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தும் கனரக வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு: வாகனஓட்டிகள் அவதி

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் மற்றும் வல்லம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைந்துள்ளது. பைக், கார், லாரி, கம்ப்யூட்டர், செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. இங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் வெளிமாவட்ட மற்றும் மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. தற்போது சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தயாரிக்கபடும் பொருட்களை ஏற்றி செல்ல, கனரக மற்றும் இலகுரக வாகனங்களை, சிப்காட் சாலையின் இருபுறமும் நிறுத்தி வைத்துள்ளனர்.  மேலும் தொழிற்சாலைக்கும் வரும் கார், கன்டெய்னர் லாரிகளை இந்த சாலையினை ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தி வைகப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளில் உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகிறது.   மேலும் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். காலை, மாலை நேரத்தில் சுங்குவார்சத்திரம், வல்லம் சிப்காட் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொது மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

ஆனால், ஒரகடம், சுங்குவார்சத்திரம் போலீசார் கண்டுகொள்வதில்லை என்று  குற்றம்சாட்டபடுகிறது.   இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது, ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம், சுங்குவார்சத்திரம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்காட்டு பன்னாட்டு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்த தொழிற்சாலைகளுக்கு வந்து செல்லும் கனரக வாகனங்கள் சிப்காட் சாலையை ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தி வைக்கின்றனர். இதனால் வல்லம் சிப்காட் பகுதியில் குடிநீர், கழிவறை, தங்கும் அறை அடங்கிய கன்டெய்னர் நிறுத்தும் இடம் அமைக்கபட்டுள்ளது. இதனை கடந்த ஆண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.  ஆனால் கன்டெய்னர் லாரி டிரைவர்கள் கண்டெய்னர் நிறுத்தும் இடத்தை பயன்படுத்தாமல், சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து நிறுத்துகின்றனர் என்று பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags : road ,area ,Vallam Sipkad ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி