×

திருப்போரூர் பேரூராட்சியில் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: கடைகளில் திடீர் சோதனை

திருப்போரூர்:  காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து வகையான பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து திருப்போரூர் பேரூராட்சி சார்பில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து  துண்டு பிரசுரம், வீதி நாடகம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.   இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக பல்வேறு கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்களில் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து நேற்று திருப்போரூர் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் தலைமையில் ஊழியர்கள் நேற்று திருப்போரூர் பேருந்து நிலையம், பழைய மாமல்லபுரம் சாலை, ரவுண்டானா, பஜார் வீதி, இள்ளலூர் சந்திப்பு ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கடைகளில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள், தட்டுகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். அனுமதியின்றியும், தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்ததாகவும் கூறி வியாபாரிகளுக்கு அளவு வைத்திருந்த நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. மொத்தம் 72 கிலோ அளவுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் முதற்கட்டமாக 1300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

Tags : Tirupoorpur ,stores ,
× RELATED குட்கா விற்பனை செய்த 3 மளிகை கடைகளுக்கு சீல்