இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற திருப்பரங்குன்றத்தில் தொழில் பூங்கா

திருப்பரங்குன்றம், மே 16: இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக திருப்பரங்குன்றத்தில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என முக.ஸ்டாலின் தெரிவித்தார். திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது தொகுதி தொடர்பான வளர்ச்சி திட்டங்கள் குறித்து பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அவர் பேசியதாவது: திருப்பரங்குன்றம் ெதாகுதியில் உள்ள விரகனூர் மதகு அணையில் கழிவுநீர் தேங்குவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணப்படும். ரிங்ரோடு-விரகனூர் சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விரகனூர், பனையூர் மற்றும் சாமநத்தம் உள்ளிட்ட கிராமங்களுக்கு கூடுதல் பஸ் வசதி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றித்தரப்படும். சவுராஷ்டிரா சமுதாய மக்களுக்காக திமுக ஆட்சி காலத்தில்தான் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

டாக்டர் கலைஞர் முதல்வராக இருந்த ேபாதுதான், சவுராஷ்டிரா கல்லூரிக்கு 27 ஏக்கர் நிலம் கொடுத்தார். ெதற்குவாசலில் ரயில்வே மேம்பாலம் கட்டி, என்.எம்.சுப்புராம் என்று பெயர் சூட்டி சவுராஷ்டிரா சமூகத்தை பெருமைப்படுத்தினார். இதேபோல் வளையங்குளம் சுற்றுப்புற பகுதியில் உள்ள கிராமங்களில் மல்லிகை பூக்கள் அதிக அளவில் விளையும். ஆனால் இப்பூக்களை விளைவிக்கும் விவசாயிகளின் வாழ்க்கையில் மணம் வீசவில்லை. எனவே மல்லிகை விவசாயிகளுக்கு உரம்,

பூச்சி மருந்து மானிய விலையில் வழங்கப்படும். மேலும் பூவுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக தொழில் பூங்கா அமைக்கப்படும். இதுபோன்ற இன்னும் பல திட்டங்கள் இத்தொகுதியின் வளர்ச்சிக்காக நிறைவேற்றப்படும். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை வெற்றி பெறச் செய்ய வேண்டும்’’ என்றார். பிரச்சாரத்தின் போது, திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி, சேகர்பாபு, செந்தில்குமார், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மணிமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: