முன்னாள் ராணுவ வீரர் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை

புதுச்சேரி, மே 15:  இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் தலைவர் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் சார்பில் 2019ம் ஆண்டுக்கான கல்வி ஊக்கத்தொகை விண்ணப்பங்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரத்தாய்மார்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. நாயக் ரேங்க் வரை மற்றும் அதற்கு இணையான விமானப்படை மற்றும் கப்பல்படை முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் 2019ம் ஆண்டு 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு தேர்வில் 80 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தவிர 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். வீரத்தாய்மார்களுக்கு ரேங்க உச்சவரம்பு கிடையாது. இதற்கான விண்ணப்பங்கள் கொட்டுப்பாளையம் இசிஆரில் உள்ள புதுச்சேரி லீக் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் வழங்கப்படும். இக்கல்வி ஊக்கத்தொகை லீக் உறுப்பினர்களுக்கு மட்டும் வழங்கப்படும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வரும் ஜூன் 30ம் தேதி, என தெரிவித்துள்ளார்.

Related Stories: