எலிமருந்து தின்று கல்லூரி மாணவர் சாவு

புதுச்சேரி, மே 15: திருபுவனை அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் வி.வி. நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் அரிகரன் (20) விழுப்புரம் மாவட்டம் கெங்கராம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அரிகரனுக்கு தொடர்ந்து படிக்க விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. ஆனால் அவரது பெற்றோர் தொடர்ந்து கல்லூரி சென்று படிக்குமாறு அறிவுரை கூறியுள்ளனர். இந்நிலையில் கடந்த 12ம் தேதி எலி மருந்து பேஸ்ட்டை சாப்பிட்டுள்ளார். பின்னர் அவருக்கு மயக்கம் வருவது போல் இருந்ததால் தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.பின்னர் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Advertising
Advertising

Related Stories: