வாகனம் மோதி தொழிலாளி பலி

திண்டிவனம், மே 15: வேலூர் பழைய டவுன் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் செல்வம் (60). கூலி தொழிலாளி. இவர் வேலூரில் இருந்து திண்டிவனத்திற்கு ஓட்டலில் வேலை செய்வதற்காக வந்துள்ளார். இவர் நேற்று அதிகாலையில் திண்டிவனம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கம் ஏரிக்கரை அருகே சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் செல்வம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த திண்டிவனம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: