வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

சின்னசேலம், மே 15:  சின்னசேலம் அருகே போர்வெல் போட அனுமதி மறுத்த வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர். சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தகரை ஊராட்சி. இங்கு சுமார் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாக குடிநீர் பிரச்சனை இருந்து வந்தது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் போர்வெல் போட நீர் ஆதாரம் இருக்கும் இடத்தை பார்த்தனர். அப்போது வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் நீர்மட்டம் இருப்பதாக தெரிந்தது. இதையடுத்து அந்த இடத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் போர்வெல் போட சென்றனர். இதை அறிந்த வனத்துறையினர் மாவட்ட வன அலுவலரிடம் முறையான அனுமதி பெற்றுதான் போர்வெல் போட வேண்டும் என்றுகூறி தடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் பொதுமக்கள் போர்வெல் போட அனுமதி மறுத்த வனத்துறையை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதை அறிந்த சின்னசேலம் போலீசார் மற்றும் வனவர் முருகானந்தம் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் வனத்துறையின் சட்ட திட்டங்களை விளக்கி பேசினர். மேலும் முறையான அனுமதி பெற்று போர்வெல் போடலாம் என்று கூறி மக்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் சின்னசேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertising
Advertising

Related Stories: