இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி சிலையை திறக்க வேண்டும்

விழுப்புரம்,  மே 15:  வரும் 21ம் தேதி முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி  நினைவுதினத்தையொட்டி விழுப்புரத்தில் உள்ள அவரது சிலைகளை திறக்க வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.இதுதொடர்பாக விழுப்புரம் மத்திய, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி  மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவா மற்றும் கட்சியினர் ஆட்சியர்  சுப்ரமணியனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: முன்னாள் பாரத பிரதமர்  ராஜிவ்காந்தியின் நினைவு தினம் வரும் 21ம்தேதி அனுசரிக்கப்படுகிறது.  விழுப்புரத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பிலும், பொதுமக்கள்  சார்பிலும் அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தேர்தல்  நடத்தை விதிகள் காரணமாக நகரில் சிக்னல் அருகே உள்ள ராஜூவ்காந்தி சிலையும், காந்திசிலை அருகே உள்ள ராஜிவ்காந்தி சிலையும் மாவட்ட நிர்வாகத்தால்  மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த  நிலையில், ராஜிவ்காந்தி நினைவு நாளில் அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாக 2  சிலைகளையும் திறக்க ஆட்சியர் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது. அப்போது நிர்வாகிகள் ராம், ராஜ்குமார், பாலன், அருள்ராஜன்,  ரமணன், குப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: