×

வெள்ள தடுப்பணை பணிக்காக சேல்விழி ஏரியில் அளவுக்கு அதிகமான ஆழத்தில் மண் எடுப்பு

முஷ்ணம், மே 15: முஷ்ணம் அருகே சேல்விழி ஏரியில் தடுப்பணை கட்டும் பணிக்காக அளவுக்கு அதிகமான ஆழத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் லாரிகளில் மண் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் முஷ்ணம் அருகே சேல்விழி கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் பழங்குடி-நெடுஞ்சேரி இடையிலான வெள்ளாற்றில் ரூ.17 கோடி மதிப்பில் வெள்ள தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு சேல்விழி ஏரியில் இருந்து டிப்பர் லாரி மூலம் மண் எடுக்கப்படுகிறது. இவ்வாறு எடுக்கப்படும் மண் அதிகமான ஆழத்துக்கு எடுக்கப்படுவதுடன், விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து எடுக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே அதிகாரிகள் ஆய்வு நடத்தி உரிய விதிமுறையின்படி மண் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : paddle lake ,
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி