×

ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

வேப்பூர், மே 15:  வேப்பூர் அடுத்த காளியாமேடு கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் விவசாய நிலங்களில் பயிர் செய்யும் வகையில் பொது ஏரி உள்ளது. இந்த ஏரியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து குடிசை போட்டுள்ளனர். சிலர் தோட்டம் அமைத்துள்ளனர். மழை பெய்தால் ஏரிக்கான நீர் வரத்து வழியையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் ஏரியில் நீர் பிடிப்பு இருக்காது. வறண்ட நிலையே நீடிக்கும்.இதனால் விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்படுவர். மேலும், கால்நடைகளும் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும். ஆகவே ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி நீர் ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள், தாசில்தார் செந்தில்வேலுவிடம் மனு அளித்தனர். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக அப்போது அவர் உறுதியளித்தார்.




Tags :
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்