கிராமங்களில் வீதி வீதியாக பிரசாரம் விடுபட்ட பணிகளை தொடர வாய்ப்பு தாருங்கள்

ஓட்டப்பிடாரம், மே 15: ஓட்டப்பிடாரம் தொகுதியில் விடுபட்ட பணிகளை மீண்டும் தொடர வாய்ப்பு தாருங்கள் என அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜன் பேசினார்.ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் நேற்று வல்லநாடு, முருகன்புரம்,செக்காரக்குடி, பேரூரணி, தளவாய்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த முறை எம்எல்ஏவாக இருந்தபோது நான் உங்களுக்காக உழைத்தேன். ஆனால் சசிகலாவுடன் சேர்ந்த காரணத்தால் எனது எம்எல்ஏ பதவியை பறித்து விட்டனர். மீண்டும் உங்களுக்காக உழைக்கவும், விடுபட்ட பணிகளை தொடரவும் ஒரு வாய்ப்பு தாருங்கள். இப்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னை, சாலை வசதி, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படும். குளங்கள் மற்றும் நீர் நிலைகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்படும். இப்பகுதியில் உள்ள முக்கிய பிரச்னைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertising
Advertising

Related Stories: