கின்ஸ் அகாடமியில் குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி

Advertising
Advertising

தூத்துக்குடி,மே 15: தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ பணிகளுக்கான இலவச வகுப்புகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி துவக்கி வைத்தார்.  தூத்துக்குடி போல்பேட்டை கின்ஸ் அகாடமியில் தமிழக அரசின் வேலை வாய்ப்புகான பல்வேறு போட்டி தேர்வு பயிற்சி வகுப்புகள் முற்றிலும் இலவசமாக நடந்து வருகிறது.  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்  துவங்கப்பட்டன.  துவக்க நிகழ்ச்சியில் கின்ஸ் அகாடமி நிறுவனர் பேச்சிமுத்து வரவேற்றார். கின்ஸ் அகாடமி தலைவர் நாகராஜன் தலைமை வகித்து பேசினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு துணை பதிவாளர் முத்துசாமி முன்னிலை வகித்து பேசினார்.  இலவச பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி தனபதி  குத்துவிளக்கு ஏற்றி வைத்து வகுப்புகளை துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர், ‘போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவர்களின் இதயத்தில் அரசு வேலை பெற்றே தீர வேண்டும் என்ற தாகம் இருக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்க கூடாது. அப்படி செய்தால் நீங்கள் ஒரு தேர்வில் மட்டுமல்ல பல அரசு தேர்வுகளில் வெற்றி பெறலாம்’ என்றார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பயிற்சியாளர் சிவகுமார் நன்றி கூறினார்.

Related Stories: