மாணவரை தாக்கிய இருவருக்கு வலை

கழுகுமலை. மே 15: கழுகுமலை அருகே கரடிகுளம் சி.ஆர். காலனியை சேர்ந்தவர் குமாரவேல் மகன் யோககுமார்(21), இவர் திருச்செங்கோட்டில் உள்ள கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். ஊர் திருவிழாவிற்காக யோககுமார் ஊருக்கு வந்தார்.

 நேற்று முன்தினம் யோககுமாரும், உறவினர் முகேசும் மொபட்டில் கழுகுமலைக்கு சென்றனர். அப்போது எதிரே ஆட்டோ மோதுவது போல் வந்துள்ளது. இதனை யோககுமார் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவரிடம் ஆட்டோவை ஓட்டி வந்த அதே ஊரை சேர்ந்த வேலு மகன் ஜெயக்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மாலையில், ஜெயக்குமாரின் உறவினர்கள் ஊட்டியை சேர்ந்த பாலமுருகன், புதுக்கோட்டையை சேர்ந்த ரெங்கசாமி ஆகியோர் சேர்ந்து யோககுமாரை தாக்கினர். இதில் காயமடைந்த யோககுமார் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின்பேரில், கழுகுமலை போலீசார் விசாரணை நடத்தி ஜெயக்குமாரை கைது செய்தனர். பாலமுருகன், ரெங்கசாமியை தேடி வருகின்றனர்.
Advertising
Advertising

பண்பாட்டு வகுப்புகள் நிறைவு விழா

உடன்குடி, மே 15: சேவாபாரதி அமைப்பின் சார்பில் உடன்குடி ஒன்றியத்தில் 140இடங்களில் கோடைகால இந்து சமய பண்பாட்டு வகுப்புகள் நடந்தது. இதில் இந்து சமய  தத்துவங்கள், இந்து ஒற்றுமை, ராமாயணம், மகாபாரதம், பழங்கால பாரதத்தின் சாதனைகள், கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் சிறுவர்களுக்கு கற்பிக்கப்பட்டன. இதில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா உடன்குடி ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் பள்ளியில் நடந்தது. முன்னாள் ராணுவவீரர் தியாகராஜன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் தேன்மொழி, முன்னாள் தலைமையாசிரியை செந்தூர்கனி, சமயவகுப்பு ஒருங்கிணைப்பாளர்கள் பத்மாவதி, மகராசி முன்னிலை வகித்தனர். சேவாபாரதி மாவட்ட தலைவர் கிருஷ்ணமந்திரம் வரவேற்றார்.  ராமேஸ்வரம் ராமகிருஷ்ணா மடம் சுவாமி நியமானந்தர் சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். இந்து சமயத்தின் மறுமலர்ச்சி, பாரத பண்பாடு, இந்து தர்மத்தை காப்பதில் பெண்கள், சிறுவர்களின் பங்கு  குறித்து ஆர்எஸ்எஸ் மாவட்டஇணை செயலர் சந்திரசேகர் பேசினார். முன்னதாக இந்து சமய வகுப்புகளில் பங்கேற்ற சிறுவர், சிறுமிகளின் பேரணி உடன்குடி சந்தையடியூர் முத்தாரம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியே தேரியூர் ராமகிருஷ்ணா பள்ளியை வந்தடைந்தது.   நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு பரிசுகள், ஆன்மிக புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

Related Stories: