கொங்கணாபுரம் அருகே விசைத்தறி உரிமையாளர் வீட்டில் 3 பவுன் நகை, ₹37 ஆயிரம் திருட்டு

இடைப்பாடி, மே 15: கொங்கணாபுரம் அருகே விசைத்தறி உரிமையாளர் வீட்டில் 3 பவுன் நகை மற்றும் ₹37 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து  சென்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இடைப்பாடி தாலுகா கொங்கணாபுரம் அருகே உள்ள பள்ளிப்பட்டி கிரிவெள்ளிக்காடு பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் சந்திரன்(48). இவர் விசைத்தறி வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது அண்ணன் திருப்பதி, புதிதாக வீடுகட்டி வருகிறார். இதனால் அவரது வீட்டில் இருந்த பீரோ, மற்றும் பொருட்களை, தம்பி சந்திரன் வீட்டில் வைத்துள்ளார்.

Advertising
Advertising

இந்நிலையில் நேற்று காலை சந்திரன் மற்றும் குடும்பத்தினர் வீ ட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள விசைத்தறி கூடத்துக்கு சென்றுவிட்டனர். மதியம் 3 மணியளவில் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீ்ட்டினுள் உள்ள சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 3 பவுன் நகை மற்றும்  ₹37ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது.  

இதுகுறித்து சந்திரன், கொங்கணாபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சண்முகம் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் மேப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: