சேலம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு இடையூறு 21பேருக்கு அபராதம்

சேலம், மே 15: சேலம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்த 21பேருக்கு ₹ 12 ஆயிரத்து 750 அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம் ரயில்வே கோட்ட பகுதியில் இயங்கும் ரயில்களில், பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் தின்பண்டங்களை விற்பனை செய்வோர் மீதும், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் ரயில்களில் அசுத்தம் செய்வோர் மீதும் ரயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர். இதில்,  அனுமதியின்றி வியாபாரம் செய்ததாக  13 பேரும், பயணிகளுக்கு தொந்தரவு செய்ததாக 6 பேரும்  என்பது உள்பட மொத்தம் 21பேர் சிக்கினர். இந்த 21 பேரையும் போலீசர் கைது செய்தனர்.  21 பேருக்கும் மொத்தமாக ₹ 12 ஆயிரத்து 750 அபராதம் விதிக்கப்பட்டது. இது போன்ற சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertising
Advertising

Related Stories: