கெங்கவல்லி அருகே நடந்த வாலிபர் கொலையில் மேலும் ஒருவர் கைது

கெங்கவல்லி, மே 15: கெங்கவல்லி அருகே நிலத்தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பெண் உள்பட 3 பேரை  தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள நடுவலூரை சேர்ந்த செந்தில்குமார் (37). இவர் தனியார் விதைப்பண்ணையில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.  இவர் வீட்டின் அருகில் வசிக்கும், கேஸ் கம்பெனியில் லாரி டிரைவராக பணியாற்றி வரும் மணிகண்டனுக்கும் (43) இடையே வீட்டின் அருகில் உள்ள ஒன்றரை அடி வழித்தட பிரச்னை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் 25ம் தேதி மணிகண்டன் மற்றும் அவரது உறவினர் தஞ்சாவூரை சேர்ந்த கூலிப்படை சேர்ந்த மூன்று பேர் அடங்கிய 8 பேர் கொண்ட கும்பல், வீட்டில் தனியாக இருந்த செந்தில்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய ஆத்தூர் டிஎஸ்பி ராஜூ தலைமையில் 5 தனிப்படையை போலீசார் அமைத்து, மணிகண்டன் உள்ளிட்டேரை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் தஞ்சாவூரில் பதுங்கியிருந்த மணிகண்டன்,  பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட கூலிப்படை தலைவன் அருண்குமார்(32), அவரது கூட்டாளி கண்ணன்(20), சீட்டிங் மணி என்கிற தமிழ்ச்செல்வன்(30) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டனின் மனைவி ராதா, அவரது மகன் அஜய் மணிகண்டன், தம்பி செந்தில்குமார், சின்னதுரை ஆகிய 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் கூடமலை அருகே உள்ள சின்ன கரட்டூர் பகுதியில் உறவினர் செல்லமுத்து வீட்டில் செந்தில்குமார் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று கெங்கவல்லி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பவுலேஸ், எஸ்ஐ லட்சுமணன் மற்றும் போலீசார் சின்னகரட்டூர் சென்று செந்தில்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: