ஜலகண்டாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ₹12 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

ஜலகண்டாபுரம், மே 15: ஜலகண்டாபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று ₹12 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் நடந்தது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளை சேவை மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.  ஜலகண்டாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 300 மூட்டை கொப்பரையை ஏல்ததுக்கு கொண்டு வந்திருந்தனர்.

சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டனர்.  தரம் வாரியாக பிரித்து கொப்பரை ஏலம் விடப்பட்டது. இதில் முதல் தர கொப்பரை கிலோ ₹64.70 முதல் ₹87 வரையும், இரண்டாம் தர கொப்பரை கிலோ ₹48.45 முதல் ₹56.40 வரையும் ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 300 மூட்டை கொப்பரை ₹12 லட்சத்திற்கு விற்பனையானது.

Related Stories: