சிகிச்சை பெற்று திரும்பியபோது விமான நிலையத்தில் பீகார் வாலிபர் சாவு: தந்தை கண்முன் பரிதாபம்

மீனம்பாக்கம்: வேலூரில் மருத்துவ சிகிச்சை பெற்று சொந்த ஊர் திரும்பிய பீகார் வாலிபர், விமான நிலையத்தில் மயங்கி விழுந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் ரமேஷ்வரார்.  இவரது மகன் ராஜீவ்குமார் (22). இவருக்கு  வயிற்றில் கட்டி மற்றும் கல்லீரல்  பாதிப்பு இருந்தது. அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமாகவில்லை. இதனால், கடந்த 15 நாட்களுக்கு முன் ரமேஸ்வரார் தனது மகன் ராஜீவ்குமாரை பாட்னாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தார். பின்னர், வேலூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  15 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.  சிகிச்சை முடிந்து நேற்று காலை அவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தனர். இதையடுத்து, தந்தை, மகன் இருவரும் சொந்த  ஊரான பாட்னாவுக்கு புறப்பட்டனர்.

Advertising
Advertising

  சென்னை விமான நிலையம் வந்த இவர்கள், பிற்பகல் 2.34 மணிக்கு பாட்னா செல்லும் தனியார் விமானத்தில்  செல்ல  டிக்கெட் எடுத்திருந்தனர். பின்னர், போர்டிங் பாஸ் எடுத்து விமானத்துக்காக காத்திருந்தனர்.  அப்போது ராஜீவ்குமார் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்து  ரமேஷ்வரார் அதிர்ச்சியடைந்தார்.தகவலறிந்து, விமான நிலைய மருத்துவ குழுவினர் விரைந்து வந்து ராஜீவ்குமாரை   பரிசோதனை  செய்தனர். அப்போது, கடுமையான மாரடைப்பால் ராஜீவ்குமார் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார். விமான நிலைய போலீசார், ராஜீவ்குமார் உடலை கைப்பற்றி பிரோத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பீகாரில் இருந்து மருத்துவ சகிச்சைக்கு வந்தவர் சென்னை விமான நிலையத்தில் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: