சுவரில் துளையிட்டு டாஸ்மாக் கடையில் நுழைந்து 25,000 மதுபானம் கொள்ளை: 1 லட்சம் ரொக்கம் தப்பியது

புழல்: புழல் அடுத்த சோழவரம் - ஆத்தூர் பைபாஸ் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும், கடையை பூட்டி விட்டு விற்பனையாளர் ரமேஷ் (45), மேற்பார்வையாளர் ரமேஷ் ஆகியோர் வீடுட்டுக்கு சென்றனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை சோழவரம் போலீசார் ரோந்து சென்றபோது, டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு இருப்பதை கண்டனர். உடனே கடையின் விற்பனையாளர் மற்றும் மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertising
Advertising

அவர்கள், சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, ₹25 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை போயிருந்தது தெரிந்தது. கல்லாவை திறக்க முடியாததால், அதில் வைத்திருந்த ₹1 லட்சம் ரொக்கம் தப்பியது.இதுகுறித்த புகாரின் பேரில் சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: