ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

கும்பகோணம், மே 15: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவ விழா நேற்று நடநதது. கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருக்கல்யாண உற்சவ விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி கடந்த 13ம் தேதி இரவு அம்பாள் தவக்கோலம், சிவபெருமான் காட்சியளித்தல் மற்றும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது.  நேற்று காலை மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் திருமண மறைசடங்கு நிகழ்ச்சி, சுவாமி வீதியுலா நடந்தது. வருகிற 17ம் தேதி வரை ஊஞ்சல் வைபவம், 18ம் தேதி பகவத் படித்துறையில் தீர்த்தவாரி நடக்கிறது. 19ம் தேதி மகா சுத்தாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.

Advertising
Advertising

Related Stories: