திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

கும்பகோணம், மே 15: கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவில் பெரப்படி வடக்கு தெருவை சேர்ந்தவர் சேகர் மகன் புவியரசன் (26). இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கடந்த 5 ஆண்டுகளாக பழகி வந்தார்.

இந்நிலையில் திருமணம் செய்து கொள்ளுமாறு புவியரசனிடம் இளம்பெண் கேட்டு வந்தார். ஆனால் திருமணம் செய்து கொள்ள புவியரசன் மறுத்து வந்தார். இதனால் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து புவியரசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertising
Advertising

Related Stories: