தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரயில் மோதி விவசாயி பலி

கும்பகோணம், மே 15: சுவாமிமலை அருகே தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரயில் மோதி விவசாயி பலியானார். கும்பகோணம் அடுத்த திருவலஞ்சுழி கீழத்தெருவை சேர்ந்த விவசாயி ராமன் (40). இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுவாமிமலை ரயில் தண்டவாளத்தில் ராமன் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கும்பகோணம் ரயில்வே இருப்புப்பாதை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: