தஞ்சை மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் மூத்த குடிமக்கள் பேரவை வலியுறுத்தல்

தஞ்சை, மே 15: தஞ்சை மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மூத்த குடிமக்கள் பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தஞ்சையில் மாவட்ட மூத்த குடிமக்கள் பேரவை மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் ஆதிநெடுஞ்செழியன் தலைமை வகித்தார். பொது செயலாளர் அக்ரி செல்வராஜ் முன்னிலை வகித்தார். பொருளாளர் செல்வராஜ் அறிக்கை வாசித்தார். இணை செயலாளர் குமரேசன் வரவேற்றார். கூட்டத்தில் தஞ்சை மாநகராட்சி பகுதியில் பெரும்பாலான இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சை- திருச்சி இடையிலான மின்சார ரயில் சேவையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். தஞ்சையில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும்.  குறுவை சாகுபடிக்கு வரும் ஜூன் மாதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசை தமிழக அரசு அணுகி உரிய தண்ணீரை பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும். கல்வித்துறையில் இதுவரை இருந்து வரும் மொழிப்பாடங்களில் 2 தாள்களும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertising
Advertising

Related Stories: