பாபநாசம் வட்டாரத்தில் மானியத்தில் விதைநெல் விநியோகம் விவசாயிகளுக்கு அழைப்பு

பாபநாசம்,  மே 15: அம்மாப்பேட்டை வட்டாரத்தில் மானிய விலையில் விதைநெல் விநியோகம்  செய்யப்படுகிறது. இதில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது. அம்மாப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் சுஜாதா  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாபநாசம் அருகே அம்மாப்பேட்டை  வட்டாரத்தில் தற்போது போர்வெல் மூலம் குறுவை நாற்று விடும் பணி மும்முரமாக  நடந்து வருகிறது. இந்நிலையில் குறுவை சாகுபடிக்கு ஏற்ற உயர் விளைச்சல்  ரகமான கோ.ஆர் 51 நெல் ரகம் கிலோவுக்கு ரூ.17.50 மானியத்தில் விநியோகம்  செய்யப்படுகிறது. விதைநெல் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை  நகலுடன் அருகில் உள்ள விரிவாக்க மையத்தை அணுகி பெற்று கொள்ளலாம்.

Advertising
Advertising

Related Stories: