கும்பகோணம் அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி வாலிபர் கைது

கும்பகோணம், மே 15: கும்பகோணம் அருகே பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். கும்பகோணம் அண்ணலக்ரஹாரத்தை சேர்ந்த ஆனந்த் மனவைி பானுப்பியா (22).  கும்பகோணம் அருகே உள்ள மாத்தி ரயில்வே கேட் அருகில் கடந்த 9ம் தேதி தண்டவாளத்தை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மர்மநபர் ஒருவர், பானுப்பிரியாவின் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறிக்க முயற்சி செய்தார். அப்போது பானுப்பிரியா கூச்சலிட்டார். இதையடுத்து பொதுமக்கள் திரண்டதை பார்த்த மர்மநபர், ரயில் பின்னால் தப்பியோடினார். இதுகுறித்து பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் பானுபிரியா புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் தாராசுரம் மறவர் தெருவை சேர்ந்த சின்னக்காமன் மகன் வினோத் (17) என்பவர் பானுப்பிரியாவின் செயினை பறிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், வினோத்தை கைது செய்து கும்பகோணத்தில் நடந்த பல்வேறு செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புள்ளதா, செயின் பறிப்பு சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: