100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் கருவிகள் விநியோகம் பாபநாசம் பகுதி விவசாயிகளுக்கு அழைப்பு

பாபநாசம், மே 15: அம்மாப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாபநாசம் அருகே அம்மாப்பேட்டையில் தெளிப்பு நீர், சொட்டு நீர் கருவிகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படுகிறது. பிஎம் கிஸான் திட்ட பயனாளிகள் பதிவு அனைத்து கிராமங்களிலும் முடிவடைந்து அந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம் சிறு, குறு விவசாயிகளின் பட்டியல் உள்ளது. இந்த சிறு, குறு விவசாயி பட்டியலில் இடம் பெற்றுள்ள விவசாயிகள் தாசில்தாரிடமிருந்து சிறு, குறு விவசாயி சான்று பெறுவது தற்போது ஆன்லைன் முறையாக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயி சான்று பெற விரும்பும் விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்து 15 நாட்கள் காத்திருந்தால் பெற்று விடலாம். இதை கொண்டு நுண்ணீர் பாசன திட்டத்தில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் தெளிப்புநீர், சொட்டுநீர் பாசன கருவிகளை பெற்று கொள்ளலாம். இச்சான்று இல்லாமல் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் கருவிகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல் வரைபடம், மின் கட்டண அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் புகைப்படத்துடன் தங்கள் பகுதி விரிவாக்க அலுவலரை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: