×

போச்சம்பள்ளி பகுதிகளில் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை

போச்சம்பள்ளி மே 15: போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் கால்நடைகக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், வெளி மாவட்டங்களில் இருந்து வைக்கோல் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை போதிய அளவில்  பெய்யாததால், கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நெல் சாகுபடி செய்வதன் மூலம் கிடைக்கும் வைக்கோலை, கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கி வந்தனர். இந்நிலையில், தற்போது நிலவி வரும் வறட்சியால் அறுவடை செய்யப்பட்ட நெல்லில் இருந்து கிடைக்கும் வைக்கோல் கால்நடைகளுக்கு பற்றாக்குறையாக உள்ளது.

இதனால், விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்காக திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் மூலம் வைக்கோலை விலை கொடுத்து வாங்கி வந்தனர். இதையறிந்த வியாபாரிகள் வைக்கோல் விலையை ஏற்றி விட்டனர். கடந்த மாதங்களில் ₹150க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கட்டு வைக்கோல் தற்போது ₹250க்கு விற்பனை செய்யப்படுகிறது. வறட்சியை பயன்படுத்தி விலையேற்றப்பட்டதால், கால்நடைகளை வைத்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags : areas ,Pochampalli ,
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்