×

மரச்செக்கு எண்ணெய்யில் கலப்படம்

போச்சம்பள்ளி, மே 15: மரச்செக்கு எண்ணையிலும் கலப்படம் உள்ளதால், அதிகாரிகள் சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக மக்கள் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், செக்கு எண்ணெய் உள்ளிட்ட உணவு முறைக்கு மக்கள் மாறி வருகின்றனர். உடலுக்கு கெடுதல் இல்லை என்பதால் இயற்கை முறை உணவு பொருட்களின் மீது நாட்டம் கொண்டுள்ளனர். இதில் அதிகம் மரச்செக்கு எண்ணைக்கு மவுசு ஏற்பட்டுள்ளது.

தற்போது பல்வேறு பகுதிகளில் மரச்செக்கு எண்ணெய் பிரபலமடையத் தொடங்கி உள்ளது.இதற்கு காரணம் வெளியே கிடைக்கும் எண்ணெய் வகைகளில் பெரும்பாலும் கலப்படம் நிறைந்துள்ளதால்,  மரச்செக்கு எண்ணையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செக்கு எண்ணெய் என்று சொல்லி விற்பனை செய்படுகிறது.ஆனால், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடாமல் உள்ளது.இதனால் எண்ணையை வாங்கி பயன்படுத்தும் மக்களிள் உடல் நலம் பாதிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்களில் சோதனை நடத்தி கலப்பட எண்ணெய்யை பறிமுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொது மக்கள் கூறியதாவது: தற்போது நாங்கள் முன்னோர் காலத்தில் சமையலுக்கு பயன்படுத்திய மரச்செக்கு எண்ணெய்யை பயன் படுத்தி வருகிறோம். இந்த எண்ணெய்  உடலுக்கு ஏற்றதாக உள்ளது. ஆனால் சிலர் போலி எண்ணெய்யை பாட்டிகளில் அடைத்து மரச்செக்கு எண்ணெய் என விற்பனை செய்கின்றனர். இதில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள். எனவே, மக்களை ஏமாற்றும் போலி எண்ணெய் விற்பனை நிலையங்களில் சோதனை செய்து தடை செய்ய வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED மனைவியுடன் பஸ்சில் வந்த டிரைவர் திடீர் சாவு