அரசு நிதியுதவி பள்ளிகள் ஊதியம் 5 மாதத்திற்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு

புதுச்சேரி, மே 14:  புதுவையில் அரசு நிதியுதவி பள்ளிகளின் ஊதியத்திற்காக அடுத்த 5 மாதத்திற்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 35 அரசு நிதியுதவி பள்ளிகள் இயங்கி வருகின்றன. புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் என 4 பிராந்தியங்களிலும் பணியாற்றும் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு 95 சதவீத ஊதியத்தை அரசும், 5 சதவீதத்தை அந்தந்த தனியார் பள்ளி நிர்வாகமும் வழங்கி வருகிறது. கடந்த ஓராண்டாக இப்பள்ளி ஆசிரியர்களுக்கான மாத ஊதியம் கிடப்பில் போடப்பட்டு தாமதமாக வழங்கப்பட்டது. நீண்ட போராட்டத்திற்குபின் 5 மாத ஊதியம் கடந்த மாதம் வழங்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: