விவசாயிகள் கோடை உழவு செய்ய அறிவுறுத்தல்

திண்டிவனம், மே 14:  ஒலக்கூர் பகுதி விவசாயிகள் கோடைஉழவு செய்து அதிக மகசூல் பெற வேண்டுமென ஒலக்கூர் வேலாண்மை உதவிஇயக்குனர் சுமதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இதுபற்றி வேளாண்மை உதவி இயக்குனர் சுமதி கூறுகையில், விவசாயிகள் ஏப்ரல், மே மாத கால  இடைவெளியில் சாகுபடி நிலத்தை தரிசாக போடாமல் சட்டிக்கலப்பை கொண்டு உழவு செய்ய வேண்டும். இந்த கோடை உழவில் ஆழமாக உழுது மேல்மண்ணை கீழாகவும் கீழ்மண்ணை மேலாகவும் புரட்டிப்போடுவதால் மண்ணில் நாள்பட இறுக்கமாக உள்ள இடம் தளர்த்தப்பட்டு இலகுவாகிறது.  இதனால் மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது.  

மழைநீர் சேமிக்கப்படுவதால் மண்ணின் ஈரப்பதம் தக்க வைப்பதோடு மண் அரிமானம் தடுக்கப்படுகிறது.      மேலும் புற்கள் அழிக்கப்பட்டு அவையே மக்கி நிலத்திற்கு உரமாகிறது. இதனால் அதிக அளவு விளைச்சல் கிடைக்கும்.  கோடை உழவினால் மண்ணில் வாழும் பல்வேறு நோய்களை உருவாக்கும் நோய்க்காரணிகள் பயிர்களை தாக்கும் பூச்சிகள் கூட்டுப்புழுக்கள் உள்ளிட்டவை அழிக்கப்படுகிறது.  ஆகையால் ஒலக்கூர் பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் கோடைஉழவு செய்து பயன்பெறுமாறு வேளாண்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Related Stories: