வக்கீலுடன் கட்டிப்புரண்டு சண்டை எஸ்.ஐ அதிரடி சஸ்பெண்ட்: கமிஷனர் உத்தரவு

சென்னை, மே 14: அயனாவரத்தை சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கார்த்திகேயன் (38) என்பவர், வழக்கு சம்மந்தமாக பட்டாபிராம் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, அங்கு உதவி ஆய்வாளர் ஜெகதீசன் (29) பணியில் இருந்தார். வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் கார்த்திகேயனுக்கும், உதவி ஆய்வாளர் ஜெகதீசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

Advertising
Advertising

ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். பின்னர், இருவரும் காவல் நிலையத்திலேயே கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். சக போலீசார் இவருரையும் சமாதானப் படுத்தினர். வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்து வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும், இருவரும் தாக்கிக்கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதுபற்றி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த வழக்கறிஞரை தாக்கியதாக பட்டாபிராம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெகதீசனை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜெகதீசன் 2018ம் ஆண்டு காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: