கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

சென்னை, மே 14: சைதாப்பேட்டை மார்க்கெட் அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சுரங்கப்பாதை அருகே 2 பைக்குகளில் 3 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிவது தெரிந்தது. போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்தபோது, பையில் 150 கிராம் கஞ்சா சிறு சிறு பொட்டலங்களாக இருந்தது.

Advertising
Advertising

விசாரணையில், மேற்கு சைதாப்பேட்டை குமாரசாமி தெருவை சேர்ந்த சூர்யா (19), சைதாப்பேட்டை விநாயகம் நகரை சர்ந்த ஷாம்நாத் (20), சைதாப்பேட்டை பிராமின் தெருவை சேர்ந்த ரித்திக் (19) என்பதும், இவர்கள் மூவரும் கல்லூரி ஒன்றில் படித்து வருவதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் 2 பைக்கை பறிமுதல் செய்தனர்.

Related Stories: