ரஷ்ய பல்கலையுடன் பாரத் கல்வி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை, ேம 14: ரஷ்யாவிலுள்ள யூரல் பெடரல் பல்கலைக் கழகமும், இந்தியாவிலுள்ள பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து, கடந்த மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். யூரல் பெடரல் பல்கலை துணை ரெக்டார் ந்யாஜேவ், எஸ்.டி. முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.  

Advertising
Advertising

இந்த ஒப்பந்தம், பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன கூடுதல் பதிவாளர் முனைவர் ஆர்.ஹரி பிரகாஷ் மற்றும் யூரல் பெடரல் பல்கலை துணை ரெக்டார் செர்கிந்யா ஜேவ் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில், இயக்குனர் அய்மஷேவயானா, பன்னாட்டு நிகழ்வுகள் துறை ஸ்வெட்லானா மிக்கைல், விமல் ஆகிய யூரல் பெடரல் பல்கலை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரண்டு பல்கலையின் நிகழ்வுகள்  மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக அமையவும், இங்கிருந்து மாணவர்களும், ஆசிரியர்களும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகளுக்காக ரஷ்யா செல்லவும், அங்கிருந்து மாணவர்களும், ஆசிரியர்களும் இங்கு வந்து பயிற்சி மேற்கொள்ளவும், மனிதவளம், கல்வி சார்ந்த வெளியீடுகள், இணைந்த கருத்தரங்கம், கருத்துப் பட்டறை போன்றவைகளை நடத்துவதற்கு ஏதுவாகவும் அமையும், என்று பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன துணை வேந்தர், மருத்துவர் கனகசபை தெரிவித்தார்.

Related Stories: