அதிமுக அரசை கலைக்க நினைக்கும் அமமுகவுக்கு பதிலடி கொடுங்கள்

செய்துங்கநல்லூர், மே 14: அதிமுக அரசை கலைக்க நினைக்கும் அமமுகவுக்கு சம்மட்டி அடி கொடுங்கள் என அமைச்சர் மணிகண்டன் பேசினார்.

ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து அமைச்சர் மணிகண்டன் கருங்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட வி.கோவில்பத்து, நாட்டார்குளம், விட்டிலாபுரம், முத்தாலங்குறிச்சி, அனவரதநல்லூர், ஆழிகுடி, முறப்பநாடு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசும் போது, ’அதிமுக அரசை கலைக்க நினைக்கும் பெட்டிகாரர்களை விரட்டியடிக்க மோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.
Advertising
Advertising

ஒருவரின் சுயநலத்திற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓட்டப்பிடாரம் தொகுதி நலத்திட்டங்களை இழந்து தவிக்கிறது. இன்றைக்கு இந்த தொகுதியில் உள்ள மக்கள் நலத்திட்ட உதவிகளை பெற வேண்டுமென்றால் துடிப்பான ஒரு எம்.எல்.ஏ வேண்டும். அந்த தகுதி முழுவதும் கொண்டவர் மோகன். எனவே அவரை ஆதரிக்க இரட்டைஇலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். வறுமை கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க அனைத்துகோப்புகளிலும் கையெழுத்திட்டார் முதல்வர். ஆனால் அதனை தடுத்து விட்டனர். இவ்வாறு அவர் பேசினார். அவருடன் வேட்பாளர் மோகன், கருங்குளம் ஒன்றிய செயலாளர் செங்கன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல்,  பொதுக்குழு உறுப்பினர் அய்யாத்துரை பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: