உடன்குடியில் காருடன் 800 மதுபாட்டில்கள் பறிமுதல்

உடன்குடி,மே14:  உடன்குடியில் மதுபாட்டில்கள் கடத்திய 2பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 800 மது பாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. உடன்குடி தாண்டவன்காடு சந்தைப்பகுதியில் டாஸ்மாக் கடை  உள்ளது. இந்த கடையில் இருந்து மதுபாட்டில்களை சொகுசு காரில் ஏற்றிச்செல்வதாக குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பலவேசம் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் 800மதுபாட்டில்களை கடத்தி வெளியிடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.

Advertising
Advertising

இதனையடுத்து மதுபாட்டில்கள், காரை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் உடன்குடி வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்த செல்லையா மகன் குமார், கீழபுதுத்தெருவைச் சேர்ந்த அயப்பன் மகன் பாலாஜி என்பதும் தெரியவந்தது. இருவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: