கட்டாரிமங்கலம் கோயில் சித்திரை கொடை விழாகட்டாரிமங்கலம் கோயில் சித்திரை கொடை விழா

சாத்தான்குளம், மே 14: கட்டாரிமங்கலம் பெருந்திரு மங்கை (எ) பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை கொடை விழா நேற்று துவங்கியது.

சாத்தான்குளம்  அருகேயுள்ள கட்டாரிமங்கலம்  வீரபாண்டிஸ்வரர்  உடனுறை  சிவகாமி அம்பாள் கோயிலின் எல்லைக்காளியாக உள்ள பெருந்திரு மங்கை (எ) பத்திரகாளியம்மன் கோயிலில்  சித்திரை கொடை விழா நேற்று துவங்கி (13ம் தேதி) துவங்கி இரு நாட்கள்  நடைபெறுகிறது. நேற்று இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு  10மணிக்கு மாக்காப்பு தீபாராதனை, நள்ளிரவு 12 மணிக்கு சாஸ்தா பிறப்பு, தீபாராதனை நடந்தது.
Advertising
Advertising

இன்று (14ம் தேதி) காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம், நண்பகல்  12மணிக்கு  மதிய கொடை, இரவு 10மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 12 மணிக்கு சாமகொடை  நடக்கிறது.

Related Stories: