கோவில்பட்டியில் சூறைக்காற்றுடன் மழை 15க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

கோவில்பட்டி, மே 14: கோவில்பட்டி மற்றும் சுற்றப்புறப்பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடுமையான வெயில் தாக்கம் தொடங்கியது. இந்த வெயில் தாக்கதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பகல் நேரங்களில் முடக்கியே இருந்தனர். நேற்று மதியமும் வழக்கம்போல் வெயிலின் தாக்கம் இருந்தது. மாலையில் திடீரென பலத்த சூறாவளி காற்றடன் மழை பெய்தது. இந்த மழைக்கு சுப்பிரமணியபுரம் 6வது தெருவில் 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் குடியிருந்து வரும் வீடுகளின் மீது மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் 15க்கு  மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. வீடுகளில் உள்ள பீரோல்,கட்டில்கள் துணிகள் மழைக்கு நனைந்து கடுமையாக சேதம் அடைந்தது. தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி இபிராமி மற்றும் நகராட்சி ஊழியர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.

Advertising
Advertising

Related Stories: